நடிகர்கள் சூர்யா மற்றும் ரஜினி ஆகியோர் மிரட்டப்படுகிறார்கள் – எம்பி வெங்கடேசன் பேச்சு!
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிட தக்கது.