இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது எனவும், ரஜினி போன்றவர்கள் முதல்வராக முயற்சிப்பது தங்களது படத்தை ஓட வைக்க தான், 50 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகு அவர்கள் ஆஸ்திரேலியா சென்று விடுவார்கள் எனவும் இனி தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது. விவசாயிகள் மட்டுமே முதல்வராக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…