வைரலாகி வரும் நடிகர் விவேக்கின் வார்த்தைகள்…!
மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இறந்த நடிகர் விவேக்கின் ட்விட்டர் வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்தார்.ஆனால்,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திருமாவளவன் போன்ற பல அரசியல் தலைவர்களும்,திரைப்பிரபலங்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சில நடிகர்,நடிகைகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில்,மறைந்த நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவுகளில் உள்ள,”எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது!எனினும் பலர் இறப்பர்;சிலரே,இறப்பிற்குப் பின்னரும் இருப்பர்!! என்ற அவரது வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.