அரசியல் ஒரு துறை கிடையாது…விஜய் வருகை குறித்து நடிகர் விஷால் கருத்து.!

vishal and vijay

சினிமா போல அரசியல் ஒரு துறை கிடையாது என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் சென்னை சேத்துப்பட்டில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது “மக்கள் நல இயக்கம்” எதற்காக தொடங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தெரிவித்தார்.

அதாவது, அரசியல் ஒரு பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு சமூக சேவை. அதனால் நான் அரசியலில் குதிப்பது, கட்சி தொடங்குவது எல்லாம் சூழ்நிலை அமைந்தால் தானாக நடக்கும். மக்கள் நிச்சயம் சரியான தலைவரை தேர்ந்தெடுப்பார்கள், இறங்கி வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அரசியலை ஒரு துறையாக பார்க்காமல், இது பொழுதுபோக்காக பார்க்காமல், மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணத்தில் இறங்கி செய்கிறார் என்றால் நல்ல விஷயம் தான்.

அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

2026 தேர்தல் வர போகிறது, விஜய் அவர்கள் இத்தனை வருடங்கள் காலத்தில் எவ்வளவு நடிகராக இந்த சமுதாயத்தில் எத்தனையோ பார்த்திருப்பார். அதுனால ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். நான் ஒரு ரசிகனா குடிமகனா மனமார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்