நடிகர் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறை குழுவினர்!
நடிகர் விஜயின் தெறி படத்தில் வெளியான, ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறையினர்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் நம்பி ராஜன் மற்றும் பயிற்சி காவலர்கள் குழுவினர் இணைந்து, நடிகர் விஜயின் தெறி படத்தில் வெளியான ஜீத்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றியமைத்து, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நடனமாடி, இந்த வீடியோவை காவலர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.