நடிகர் விஜய் தாய், தந்தைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 27 -ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா ஆகியோர் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாக விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது எனவும் தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க கோரி நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் செல்லவில்லை என கூறப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகததால் பதில் மனுக்கள் அவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.
மேலும், வழக்கு விசாரணைசெப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்து.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…