தாய், தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணை..!

Default Image

நடிகர் விஜய் தாய், தந்தைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 27 -ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா ஆகியோர் என  கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாக விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது எனவும் தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க கோரி நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் செல்லவில்லை என கூறப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகததால் பதில் மனுக்கள்  அவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.

மேலும், வழக்கு விசாரணைசெப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்