#BREAKING: நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்…!
விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறை உத்தரவு.
கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, சொகுசு கார் தொடர்பாக உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜயின் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு. இதனால், நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.