திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஜய்.!
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான திருமாவளவன் அவர்களின் 61வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய் , திருமாவளவனுக்கு போன் செய்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை திருமாவளவன் தனது X சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்கப்பட்ட போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு. திரைப்படத்தில் கிடைத்த புகழை பயன்படுத்தி முதலமைச்சராகிவிடலாம் என அரசியலுக்கு வருகிறார்கள் என திருமாவளவன் விமர்சித்து இருந்தார் என்றும், பின்னர் நடிகர் விஐய் பற்றி கூறவில்லை என விளக்கம் அளித்து இருந்தார் திருமாவளவன்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! pic.twitter.com/DnpQeb20jy
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 17, 2023