முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு இன்று அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் பாமக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குடியரசு தலைவர் திரௌபதிமுர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களின் மூலம் அன்புமணி ராமதாஸ்க்கு தெரிவித்து இருந்தார்கள்.
அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்புமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் நிலையில்,தற்போது டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இதைப்போலவே கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சயின் தலைவர் திருமாவளவனுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…