நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் – சீமான்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டே சோதனை நடைபெறுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனைகள் மேற்கொள்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் உள்ளது. இதில் நேர்மை இல்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை அச்சுறுத்துகின்றனர். முதல்வர் சொன்னது சரி தான்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சனாதன என்றால் என்ன என்கின்ற வரையறையை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆதிக்க சாதி என்றும் ஒருவருமில்லை, அடிமை சாதி என்றும் ஒருவருமில்லை. நான் உயர்ந்த சாதி என எண்ணுபவர்கள், நமக்கு கீழே தாழ்ந்த சாதி யாருமில்லை என நினைத்தால் பிரச்னையே வராது.
நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்; அவர் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு கட்சி ஆரம்பிப்பார். வந்த பிறகு அவருடன் கூட்டணி குறித்து பேசி முடிவு சொல்லலாம்; தற்போது நான் தனித்து போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025