நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு நுழைந்தோர் பலர் உண்டு. அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் விஜய் அரசியலில் காலெடுத்து வைத்திருப்பது அனைவரது பார்வையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விஜய்யின் அரசியல் நுழைவு மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை நினைவுபடுத்துகிறது. அதாவது விஜயகாந்த், நடித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுத்தி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்து. பின்னர் தான் தேமுதிக கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
13ஆண்டுகளுக்கு முன் அரசியல் குறித்த கேள்விக்கு விஜய் சொன்ன பதில்?
அந்த பாணியில் சினிமாவில் விஜயகாந்த் உதவியுடன் உயர்ந்த நடிகர் விஜய்யும், தனது ரசிகர்களை மக்கள் இயக்கத்தில் இணைத்து, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுத்தினார். பின்னர் உள்ளாட்சி தேர்தலில் அவர்களை போட்டியிட செய்து, தற்போது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…