முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்ததாக நிர்வாகிகள் தகவல்.
சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 37 மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் 350 பேரை விஜய் சந்தித்ததாகவும் இன்று முதல் 3 நாட்கள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், எதிர்கால அரசியல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜய் கூறினார் என்று நடிகர் விஜயை சந்தித்துவிட்டு வந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலில், முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். அவர் கை காட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும், இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அரசியலை பொறுத்தவரை அஜித், ரஜினி ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…