அரசியலில் இறங்கினால் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.. நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல்!

VIJAY Honors Students

முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்ததாக நிர்வாகிகள் தகவல்.

சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 37 மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் 350 பேரை விஜய் சந்தித்ததாகவும் இன்று முதல் 3 நாட்கள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், எதிர்கால அரசியல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று விஜய் கூறினார் என்று நடிகர் விஜயை சந்தித்துவிட்டு வந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலில்,  முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். அவர் கை காட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும், இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அரசியலை பொறுத்தவரை அஜித், ரஜினி ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்