நாளை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்த நடிகர் விஜய் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர போட்டியில் முன்வரிசையில் இருக்கிறார். அவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கங்களாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கம் :
விஜய் மக்கள் இயக்கம் , அரசியல் இயக்கமாக பதிவு செய்யவில்லை என்றாலும், ஓர் அரசியல் இயக்கம் போலவே பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விஜயின் பிறந்தநாளில் மக்களுக்கு நலத்திடங்கள், ரத்த தானம், அன்னதானம் என களமிறங்கிய ரசிகர்கள், கடந்த உள்ளாட்சி தேர்தலில் அரசியல் களத்திலும் களமிறங்கினர்.
வார்டு உறுப்பினர்கள் :
விஜய் மக்கள் இயக்கம் பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் நிற்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அனுமதி அளித்தார். அதன் விளைவு தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய கணிசமான அளவில் வார்டு உறுப்பினர்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டி , புகைப்படம் எடுத்து கொண்டார்.
அம்பேத்கர் ஜெயந்தி :
விஜயின் இந்த நகர்வு, தனது ரசிகர்ளை வைத்து, அரசியலில் ஆழம் பார்க்கும் முக்கிய நிகழ்வாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக, நாளை ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அரசியலில் விஜய் :
விஜயின் தற்போதைய நகர்வு நடாளுமன்ற தேர்தலை அவர் குறை வைக்கிறாரா? என பேச வைக்கிறது. இருந்தும், விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பதால், கண்டிப்பாக இன்னும் சில வருடங்களுக்கு அரசியலுக்கு வரமாட்டார் எனவும், அவரது ஆதரவுடன் அவரது ரசிகர்கள் வேண்டுமானால் அரசியலில் களம் காண வாய்ப்புள்ளது எனவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…