தனது சர்ச்சை கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட வரதராஜன்.!

Default Image

கொரோனா சிகிச்சைகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய டிவி நடிகர் வரதராஜன், இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.   

டிவி நடிகர் வரதராஜன் பேசிய ஒரு வீடியோ அண்மையில் மிகவும் வைரலானது. அதில் பேசிய வரதராஜன், ‘ தனது நண்பர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்டிருந்தார். அவருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானோம்.

மேலும், ‘ சென்னையில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி எதுவும் இல்லை. மருத்துவமனைகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் பேசினோம். இருந்தாலும், உதவி எதுவும்  கிடைக்கவில்லை. ஆதலால், யாரும் அவசியமின்றி வெளியில் செல்லாதீர்கள்.’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து அந்த வீடியோ குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடுமையாக விமர்சித்தார். மேலும், தவறான தகவல் பரப்பியதாக வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் கடுமையான விமர்சனத்தினை அடுத்து புதிய வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வரதராஜன், அதில், பேசுகையில், ‘ தன்னுடைய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என பதிவிட்டுருந்தேன். அதில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில்  அவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மேலும், அந்த வீடியோவை முதலில் எனது நண்பர்கள் இருக்கும் குரூப்பில் மட்டுமே தனிப்பட்ட முறையில் பதிவிட்டுருந்தேன். அதன் பின்னர் பகிரப்பட்டு, அந்த வீடியோ வைரலாகிவிட்டது.  

முக்கிய தேவைகள் இருந்தால் மட்டுமே நாம் வெளியில் செல்ல வேண்டும். அத்தனையும் மீறி சென்றால் அரசு சொன்னபடி மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். சானிடைசர் உபயோகபடுத்த வேண்டும். கொரோனா தொற்று நமக்கு ஏற்பட்டால் அது நம் குடும்பத்தினருக்கும் பிரச்னைதான். வெளியில் சென்று வர நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், வீடு திரும்பியதும் குளித்து விட்டு செல்ல வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். 

மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் நமக்காக முழுவீச்சில் வ வேலைசெய்து வருகின்றனர். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை.

என்னுடைய முதல் வீடியோவை நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு தமிழகம் முழுக்க மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதிகள் உள்ளிட்ட தகவல்களை எனக்கு அனுப்பியிருந்தார். அதனையும் இந்த பதிவில் இணைத்துள்ளேன். அதில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.’ இவ்வாறு டிவி நடிகர் வரதராஜன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ மூலம் தனது முதல் விடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்