நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு இடையில் தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.
தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.