நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை வெளிக்காட்டும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளனர். முதல்வர் அவர்களும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் பழங்குடியின இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தனது தயாரிப்பு நிறுவனம் (2D) சார்பில் ரூ.1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…