sivakumar [file image]
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!
அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சிவக்குமார்” இந்த மண் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த்தை யாரும் மறக்க மாட்டோம். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகவேண்டிய ஒரு நபர். ஆனால், இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. புதுயுகம் படத்தில் நானும் விஜயகாந்துடன் நடித்தேன்.
கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், 1996 ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கலைஞர் அவர்களுக்கு ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை விஜயகாந்த் மட்டுமே தனியாக நின்று செலவு செய்து நடத்தினார்.
அந்த விழாவிற்கு பிறகு அடுத்த தேர்தலில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆன பிறகு லட்ச கணக்கில் கடன் இருந்தது. கமல் ரஜினி எல்லாம் அந்த சமயம் உயரத்தில் இருந்தார்கள். அவர்களுடைய உயரத்திற்கு விஜயகாந்தும் வளர்ந்தார்.
ஆனால், மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடைய வீட்டிற்கு சென்று மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். கடன்கள் பலவற்றையும் அடைத்தார். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம்மலுடன் இல்லாதது வேதனை” எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…