விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

sivakumar

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும்,  விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சிவக்குமார்” இந்த மண் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த்தை யாரும் மறக்க மாட்டோம். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகவேண்டிய ஒரு நபர். ஆனால், இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. புதுயுகம் படத்தில் நானும் விஜயகாந்துடன் நடித்தேன்.

கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், 1996 ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கலைஞர் அவர்களுக்கு ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை விஜயகாந்த் மட்டுமே தனியாக நின்று செலவு செய்து நடத்தினார்.

அந்த விழாவிற்கு பிறகு அடுத்த தேர்தலில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆன பிறகு லட்ச கணக்கில் கடன் இருந்தது. கமல் ரஜினி எல்லாம் அந்த சமயம் உயரத்தில் இருந்தார்கள். அவர்களுடைய உயரத்திற்கு விஜயகாந்தும் வளர்ந்தார்.

ஆனால், மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடைய வீட்டிற்கு சென்று மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். கடன்கள் பலவற்றையும் அடைத்தார். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம்மலுடன் இல்லாதது வேதனை” எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்