வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்! 

உலக செஸ் சாம்பியன் குகேஷை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டி வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.

World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை தோற்கடித்து, 2024ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 18 வயதில் வென்ற குகேஷுக்கு, பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழக அரசு, ரூ.5 கோடி பரிசு வழங்கி குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தி கௌரவித்தது.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது, அவருக்கு நினைவு பரிசாக வாட்ச் ஒன்றை அளித்து மகிழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குகேஷ் உடன் அவரின் பெற்றோர்களும் இருந்துள்ளனர். அந்த சமயம் கேக் வெட்டி அதனை நடிகர் சிவகார்த்திகேயன் – குகேஷ் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்