நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது.
நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் கட்சியின் தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து பேசிய பின்னர் பாஜகவில் இணைந்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும், நான் தற்போது பிரதமர் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைக்கிறேன் என்று மாநில தலைவர் எல் முருகனின் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் பாஜகவில் இணைவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பாஜகவில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…