PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் , வேட்பாளர்கள் மட்டுமல்லாது நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் தற்போது தான் தமிழக தேர்தல் களம் என்பது களைகட்ட ஆரம்பித்துள்ளது.
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பாஜக நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இவர் முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்து இருந்தார்.
இவர் பேசுகையில், நான் முதலில் அதிமுகவில் இருதேன். அதிமுகவுக்கு சேவல் சின்னம் கொடுக்கப்பட்டது முதல் நான் இருந்தேன். அப்போது எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. 1989க்கு பிறகு தான் எனக்கு பின்னால் வரிசையில் வருகிறார். அப்போது இருந்தே இருக்கும் அடிமட்ட தொண்டனாகிய எனக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தான் இங்கு (பாஜக) வந்துள்ளேன்.
பிரதமர் மோடி மட்டும் இல்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. கொரோனா தடுப்பூசியெல்லாம் மோடி ஐயா தவிர உலகில் வேறு யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது என பிரதமர் மோடி ஆட்சியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊசி தான் அமெரிக்கா வரையில் ஏற்றுமதியானது என்றும் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் இங்குள்ள மக்கள் அதிகம் பேர் உயிரிழந்து இருப்பர் . கச்சத்தீவு மோடி ஐயா இருந்து இருந்தால் இலங்கைக்கு போயிருக்காது. இப்போ கூட அவர் நினைச்சா கச்சத்தீவு இங்க வந்துரும் என கூறி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார் நடிகர் செந்தில்.
மேலும், தமிழகத்தில் பழனி முருகன், நீலகிரியில் எல்.முருகன் (பாஜக வேட்பாளர்), இங்கு பிரச்சாரம் செய்ய வந்து இருப்பது செந்தில் முருகன் என ரைமிங்கில் பேசியும் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார் நடிகர் செந்தில்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…