தேர்தலில் ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம்!

சரத்குமார் : நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது.
இந்த நிலையில், தேர்ததலில் தன்னுடைய மனைவி ராதிகா வெற்றிபெறவேண்டும் என்று சரத்குமார் கோவிலில் அங்கப் பிரதிஷ்டம் செய்துகொண்டார். இன்று காலை விருதுநகரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் வருகை தந்தனர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குளை பெற்று வெற்றிபெற வேண்டியும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டியும் அங்கபிரதட்சணம் செய்துகொண்டார். அது மட்டுமின்றி, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்வில் மனைவி ராதிகா மற்றும் பாஜகவினரும் கலந்துகொண்டார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025