நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை – இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு இணையதளம் அறிவிப்பு!

Default Image

டி.ன்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடக்கம்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை TNPSC மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டின்.பி.எஸ்.சி.தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலம் பயிற்சி அளிக்கப்படும் என ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கடந்த 14ம் தேதி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான இணையதளம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது.

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச TNPSC குரூப் தேர்வு பயிற்சிக்கான ‘சூப்பர் 100 பிரிவு’ பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், பயிற்சி பெற விரும்புவோர் https://rajinikanthfoundation.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

report

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்