நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!
நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதர குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஆர்.கே. சுரேஷிக்கு தொடர் இருப்பது விசாரணையில் அம்பலமானது.
ஏற்கனவே, இதுதொடர்பாக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்கே சுரேசை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாததால் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.