சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த புகைப்பட கண்காட்சி முடிந்ததும், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் கன்னியாகுமரி பயணம் பற்றியும், அது தொடர்பான வீடியோ வெளியாவது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய பிரகாஷ் ராஜ், அவரே கேமிராமேன், டைரக்டர், ஆடியன்ஸ் என அனைவரையும் கூட்டிக்கொண்டு சென்று ஷூட்டிங் நடத்தி வருகிறார் என விமர்சனம் செய்தார்.
அடுத்தது காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பதில் கூறிய பிரகாஷ் ராஜ், ஆமாம், எனக்கும் பிரதமர் மோடி வந்த பிறகு தான் கன்னியகுமாரியே தெரியும். விவேகானந்தர் பற்றி கூட இப்போது தான் தெரியும் என நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து தான் பாஜகவை எப்போதோ அனுப்பியாச்சே. மேலே (வடக்கே) என்ன மக்கள் என்ன முடிவு பண்ணிருக்காங்கனு தெரியல. அவங்களும் மோடியை வீட்டுக்கு அனுப்புற முடிவுல தான் இருக்காங்கனு நினைக்கிறேன். அனுப்பினால் நன்றாக இருக்கும். ஆளும் கட்சி தான் தோற்கும். அதற்குரிய அனைத்து வேலைகளையும் மோடி பார்த்துவிட்டார் என நடிகர் பிரகாஷ் ராஜ் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…