சசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு….!
அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு, உறவினர் என்னும் முறையில் நலம் விசாரிக்க வந்தேன். சசிகலா நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னதாக, நடிகர் சரத்குமார் – ராதிகா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல பிரபலங்கள் சசிகலாவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.