நடிகர் பூ ராமு மறைவு – திருமாவளவன் ட்வீட்

Default Image

பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ட்விட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘திரைக் கலைஞர் பூ. ராமு அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எமது வீரவணக்கம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்