கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விவேக் மரணத்தை அடுத்து பேசிய மன்சூர் அலிகான் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை குறித்து விமர்சித்திருந்தார். இதையடுத்து கொரோனா தொற்று நோயைப் பரப்பும் தீய எண்ணத்துடன் நடப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலி கான் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை தடுப்பூசி வாங்க சுகாதாரத்துறைக்கு தரவும் ஆணையிட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என நிபந்தனை விதித்து, கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…