நடிகர் கமலஹாசன் நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 7- ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுளார். இந்த பிறந்தநாளை அவர் ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் காலெடுத்து வைத்த நாள்முதல் இன்றுவரை கலையுலகில் தனிப்பெருங்கலைஞனாக கோலோச்சி வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமுன் அரசியலில் கால்பதித்த நாள்முதல் நெறிதவறா அரசியலை தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வருபவர், நம்மவர்,
ரசிகருக்கு உலகமகா கலைஞன், தொண்டருக்கு நிகரில்லா தலைவன் இயல் இசை நாடகம் மூன்றிலும் வாகை சூடிய முத்தமிழன் தலைவர்.திரு.கமல்ஹாசன் அவர்களின் 68வது பிறந்ததினம் வரும் நவம்பர் 7.
அந்த நாள் ஒரு சாதாரண நாள் அல்ல, அவரது அன்பு ரசிகர்களும், அருமைத் தொண்டர்களும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவாகக் கொண்டாடும் பெருநாள்.
இந்த ஆண்டும் அந்த இனிய நாளை சிறப்புடன் கொண்டாட, நாமெல்லாம் வரும் 7.11.2022 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலையில் அமைந்துள்ள மயிலை ஃபைன் ஆர்ட்ஸ் மண்டபத்தில் திரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக அவரோடு இணைந்து அவரது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாட, நம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்று கூடுவோம்.
கலையுலகை நவீனப்படுத்தியவர், இன்று மாற்று அரசியலை முன்னெடுப்பவர் நம் தலைவர். அவர் கரம் வலுப்பெற, நம் கரம் உயர்த்துவோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…