நடிகர் திலீப்குமாரின் மறைவு ஒட்டு மொத்த இந்திய சமூகத்துக்கே பேரிழப்பு – முதல்வர் இரங்கல்!
நடிகர் திலீப்குமாரின் மறைவு ஒட்டு மொத்த இந்திய சமூகத்துக்கே பேரிழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபலமான பாலிவுட் நடிகர் திலீப் குமார் அவர்கள் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மும்பையில் உள்ள கர் பகுதியில் இருக்கும் இந்துஜா எனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திலிப் குமாரின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணி அளவில் நடிகர் திலீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திலிப் குமாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் ,பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவருமாகிய நடிகர் திலீப் குமாரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு இழப்பு எனவும், என்னுடைய சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
இந்தியத் திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவருமான நடிகர் #DilipKumar அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்குமே பேரிழப்பு!
என்னுடைய சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/N0zgORmiRh
— M.K.Stalin (@mkstalin) July 7, 2021