நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டியவர் கைது…!
நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை சுருட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் போண்டாமணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை போரூர் அருகே நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து ராஜேஷ் பிரிதிவ் என்பவர் மருந்து வாங்கி தருவதாக போண்டாமணியின் மனைவியிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி சென்றார்.
ஆனால் அவர் மருந்து வாங்குவதற்கு பதில் ஏடிஎம் கார்டு மூலம் நகைக்கடையில் ஒரு லட்சத்துக்கு நகை வாங்கி உள்ளார். இதனையடுத்து, நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்வது போல் நடித்து பணத்தை சுருட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.