நடிகர் அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது- அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், யார் நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை, எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயார்.
நடிகர் அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது, அஜித்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.தலைமை செயலகத்தில் சாமி கும்பிட்டதில் என்ன தவறு? இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அரசின் நிதி நிலையை பொறுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.