“அஜித்க்கு எதிராக சதி செய்த அஸ்திரேலியா”என்ன சொல்றீங்க தலைக்கு எதிரா சதியா..???

Published by
kavitha

நடிகர் அஜித்தின் அணிக்குஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அஜித் வழிகாட்டுதலில் இயங்கிய  மாணவர்குழு அதிக புள்ளிகள் பெற்ற நிலையிலும் முதலிடத்தை பிடிக்க விடாமல் சதி செய்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Image result for ajith anna university news

நடிகர் அஜித் ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி(MIT)கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம்  ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது முறுக்கியது.

உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.இதில் நடிகர் அஜீத்தை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்தது.

இந்த சர்வதேச போட்டியானது 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை வந்தடைய வேண்டும். அதில் அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.

இந்நிலையில் நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றில் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், ஆஸ்திரேலிய நடுவர்களால் திட்டமிட்டு மதிப்பெண் குறைக்கப்பட்டதால் 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக் ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு பாரபட்ச நோக்குடன் தள்ளப்பட்டது.

எனவே 116.55 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் விமான குழு முதலிடம் பிடித்ததாகவும், 115.70 புள்ளிகளுடன் தக்ஷா விமான குழு 2 வது இடம் பிடித்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலமாக ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தது.ஆனால் எம்.ஐ.டியின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியர் செந்தில்குமார்.

இந்த போட்டி குறித்து தெரிவித்தார் அதில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் கூட இறுதிப்போட்டியை எட்ட முடியாத சூழலில் ஆஸ்திரேலியாவுடன் கடும் போட்டி நிலவியதாகவும், அதிக புள்ளிகள் பெற்ற நிலையிலும் ஆஸ்திரேலிய நடுவர்களின் நிறவெறி காரணமாக நேர்முக தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்ட சதியால் நமது மாணவர்கள் முதல் இட கனியை எட்ட இயலாமல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

 

இந்தநிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் இருப்பதால் தனது குழுவுடன் செல்ல இயலாத சூழ்நிலை  ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தாலும் தினமும் பேராசிரியர்களையும் ,  மாணவர்களையும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வந்துள்ளார் நடிகர் அஜீத் மேலும் இந்த வெற்றிக்காக தக் ஷா குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

40 minutes ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

1 hour ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

2 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

2 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

2 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

3 hours ago