ரவுடிகள் போல் யார் செயல்பட்டாலும் நடவடிக்கை பாயும் – அமைச்சர் எச்சரிக்கை
கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவினர் தெரிவித்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.
சட்டத்திற்கு உட்படாமல் ரவுடிகளை போல் யார் செயல்பட்டாலும் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவை சேர்ந்தவர்கள் அறிவித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கவுண்டன்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறந்து வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
சட்டத்தை கையில் எடுப்பதற்கும், ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் கிடையாது. நானா இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, ஆணையராக இருந்தாலும் சரி, மேயராக இருந்தாலும் சரி. அரசுக்கு ஒரு விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படிதான் செயல்பட முடியும். வன்முறை தூண்டுபவர்கள் மற்றும் ரவுடிகளை போல் செயல்படுபவர்கள், சொல்லக்கூடிய நபர்கள் களத்தில் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காதது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.