தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வலங்கைமான் ஆகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.