பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான புகார்கள்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால்,பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்,பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும்,இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:”பெண்குழந்தைகளின் பாதுகாப்பிற்காக,பள்ளிகளில் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என்று அதிகமான கோரிக்கை வருகிறது.எனவே,அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,கல்வி என்பது மிகவும் முக்கியம்.அந்த கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் தருவதுதான் அரசின் குறிக்கோளாக உள்ளது.
எனவே,தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுதொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவிடம் புகார் செய்யலாம்”,என்று தெரிவித்தார்.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…