தேர்தல் பரப்புரைக்கு இந்த வாகனத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்து ஆணையர்
தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து, இன்று முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கமல், சீமான், டிடிவி போன்ற தலைவர்கள் உட்பட பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் காரசாரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாகன உரிமையாளர், விற்பனையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவெண் பெறாத வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தால் அபராதமும் விதிக்கப்படும் என்றும், வாகன விற்பனையாளர்கள் வணிக சான்று தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.