பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24, ஏப்ரல் 10 மற்றும் 24-ல் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ளதாக மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுள்ளனர்.
இதுபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுவதை பள்ளி மேலாண்மை குழு உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் வரும் 19ம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…