இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி பேட்டி!

Udhayanidhi Stalin

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கட்டட்பட்ட, கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி, தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி பள்ளிக்கல்வித்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். எனவே, அடுத்தாண்டு முதல் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்த அமைச்சர், முதனமை உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் தொடர்பாக விசாரணைக்கு பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்