பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை – அமைச்சர்
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க ஐடி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த மாநாட்டில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், சைபர் கிரைம் தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்றும் இந்திய கல்விமுறை சமூக அக்கறையை கொடுக்காததால் பள்ளிகளில் இருந்துதான் பாகுபாடு உருவாகுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.