15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேசனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.