10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை இடிக்க நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பழுதடைந்துள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிப் பேருந்து இயக்க வேண்டும் என்றால் பள்ளி அனுமதி பெறவேண்டும்.
பேருந்தில் கண்டிப்பாக அட்டெண்டர் ஒருவர் இருக்க வேண்டும். பேருந்திலிருந்து குழந்தைகள் இறங்கும் போது இரண்டு ஆசிரியர்கள் கண்டிப்பாக இருந்து குழந்தைகள் இறங்கி வகுப்பறைக்கு சென்ற பின்பு தான் பேருந்தை இயக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்று தெரிவித்தார்.