பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கோழிப்பண்ணைகளில் ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளத்தின் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.பண்ணையாளர்கள் நலன் கருதி சோளம் இறக்குமதிக்கு வரியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.