மே 3 ஆம் தேதிக்கு பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசிடம் அறிக்கையை வல்லுநர் குழு சமர்பித்துள்ளார்கள்.
எந்தந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம் என்பது பற்றி தமிழக வல்லுநர் குழு 2 ஆம் அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வல்லுநர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது 2ம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க தான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர் என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நேற்று கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்று கூறினார். பின்னர் கொரோனா குறித்தும், ஊரடங்கை பற்றியம் முதல்வரிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…