“தமிழக அரசின் தலைமை செயலாளரை காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க நேரிடும்”- உயர்நீதிமன்ற மதுரை கிளை!
சட்ட விரோத மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, கடும் எச்சரிக்கையை முன்வைத்தனர். மேலும், மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை தொடர்ந்து சோதிக்க வேண்டாம் எனவும், மீறினால் தமிழக அரசின் தலைமை செயலாளரை காணொலிக் காட்சி மூலமாக விசாரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
அரசின் உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ள நீதிபதிகள், சட்ட விரோத மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.