ஆளுநருக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி முடிவு! எம்பிகளுக்கு அழைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாளைக்குள் அறிவாலயம் வந்து மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக திமுக தலைமை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாளைக்குள் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து, ஆளுநரை திரும்ப பெறுவதற்காக குடியரசு தலைவரிடம் அளிக்க உள்ள மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு வேண்டுகோளை வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றும் நிலையில், திமுக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவை சம்பவம் குறித்து சமீபத்தில் ஆளுநர் கருத்து தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது. எனவே, ஆளுநரை திரும்ப பெறுவதற்கான மனுவை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் படித்து பார்த்து கையெழுத்திடுவதை அடுத்து விரைவில் டெல்லி சென்று அந்த மனுவை குடியரசு தலைவரிடம் திமுக தலைமை அளிக்கும் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

30 minutes ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

1 hour ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

3 hours ago