கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – எல்.முருகன்

கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் உரையில், மார்ச் 24-ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது, அவர்கள் யாரும் ஒரு வேளை கூட உணவு இல்லாமல் இருக்க கூடாது.
அரசாங்கத்தின் சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடிக்கு நிவாரண பணிகளை மத்திய அரசு ஒதுக்கியது.கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வில் லட்சக்கணக்கான மக்கள் இணைய காரணம் நரேந்திர மோடி மீது உள்ள நம்பிக்கையில் தான்” என்று தெரிவித்துள்ளார்.