டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம் 3 , பைரவா ஆகிய படங்கள் பண்டிகை நாட்களில் வெளியானது என்பதால் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலலிப்பதாக தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அரசு மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வளவு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து வந்த அறிக்கையில், திரையரங்குகளில் அதிகம் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் வந்ததாகவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 100 ரூபாய் வசூல் செய்ததாகவும், பிறகு இதில் சம்பந்தப்பட்ட திரையரங்குகளிடம் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும், இதனை தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, நீதிபதி அனிதா சுமந்த் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…